தியதலாவை விமானப்படை போர் பயிற்சிப் பள்ளியில் விமானப்படை தளபதியின் ஆய்வு.
விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க  2026 செப்டம்பர் 18 அன்று தியதலாவையில் உள்ள இலங்கை விமானப்படை போர் பயிற்சிப் பள்ளியில் (SLAF CTS) தளபதிக்கான வருடாந்த ஆய்வை மேற்கொண்டார்.

தியதலாவா SLAF CTS-இன் கட்டளை அதிகாரி எயார்  கொமடோர் லலித் சுகததாசவின் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பைத் தளபதி பார்வையிட்டார். இந்த அணிவகுப்பின் போது, ​​இலங்கை விமானப்படைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காகப் பின்வரும் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன:

பிளைட் சார்ஜென்ட் ஆர்.எம். சமரனந்த – உணவுப் பிரிவு நிபுணர் (I)
பிளைட் சார்ஜென்ட் டி.எம்.டி.சி. திஸாநாயக்க – தரைவழிச் செயல்பாடுகள் (சிறப்பு)
பிளைட் சார்ஜென்ட் எஸ்.எம்.எம்.பி. திஸாநாயக்க – உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் (I)
கோப்ரல்  எச்.எம்.எஸ்.ஆர். ஹேனாயக்க – விமானப்படை சுகாதார ஆய்வாளர் (I)
கோப்ரல்  எச்.ஆர்.என். மதுமல்கா – தாதி (I)
கோப்ரல்  ஆர்.எம்.யு.எஸ். ரத்நாயக்க – தரைவழிச் செயல்பாடுகள் (III)
கோப்ரல்  டி.எம்.கே. திஸாநாயக்க – தரைவழிச் செயல்பாடுகள் (III)
சிவில் ஊழியர் திரு. எம்.கே.ஆர். வீரரத்ன – உதவியாளர் (II)

ஆய்வின் போது, ​​தளபதி அப்பள்ளியின் பல முக்கிய பகுதிகளைப் பார்வையிட்டார். இதில் பள்ளித் தலைமையகம், 30-வது ரெஜிமென்ட் பிரிவு, பயிற்சிப் பிரிவுத் தலைமையகம், விளையாட்டுப் பிரிவு, பிரதான காவல் அறை, மருத்துவமனை, பயிற்சியாளர்களுக்கான தங்குமிடம், நலன்புரி விற்பனை நிலைய வளாகம், மின்னணுப் பிரிவு, நீச்சல் குளம், முன்பள்ளி, குதிரை லாயம், புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட விடுமுறை இல்லங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான விடுமுறை இல்லம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம்கள்  ஆகியவற்றை பார்வையிட்டார்.

தனது நிறைவுரையில், சாதாரண குடிமக்களைத் திறமையான படைவீரர்களாக மாற்றுவதில் கட்டளை அதிகாரி மற்றும் அவரது தலைமையின் கீழ் உள்ள பணியாளர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க மற்றும் அயராத முயற்சிகளுக்குத் தளபதி தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.  மேலும், பள்ளி முழுவதும் ஒழுக்கம், தொழில்முறைத் திறன் மற்றும் மிக உயர்ந்த தரநிலைகளைப் பேணுவதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார். இத்தகைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை விமானப்படையின் நற்பெயரை உயர்த்துவதிலும், தேசிய அபிவிருத்தியின் பரந்த நோக்கங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தளபதி வலியுறுத்தினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை