13-வது உலக வலிமை பளுதூக்கும் (Strength Lifting) சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் மற்றும் உலக சாதனை படைத்த துலித் தஸ்ஸநாயக்கவிற்கு இலங்கை விமானப்படை பதவி உயர்வு வழங்கி கௌரவித்து.
கிர்கிஸ்தானில் நடைபெற்ற 13-வது உலக வலிமை பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில், 'ஹேக் லிஃப்ட்' (Hack Lift) பிரிவில் 95 கிலோவிற்கும் குறைவான எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் துலித் தஸ்ஸநாயக்க, புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
260 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கி இந்தச் சிறப்பான சாதனையை அவர் படைத்தார்; இதன் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கைக்கும் இலங்கை விமானப்படைக்கும் மிகப்பெரும் பெருமையினை சேர்த்துள்ளார்.
கோப்ரல் துலித் தஸ்ஸநாயக்கவின் சிறப்பான விளையாட்டுத் திறமை மற்றும் சாதனையைப் பாராட்டி, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க,அவர்கள் 'கோர்போரல்' நிலையிலிருந்து 'சார்ஜென்ட்' நிலைக்குச் சிறப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி கௌரவித்தார் இதற்கான சிறப்புப் பாராட்டு மற்றும் கௌரவிப்பு விழா (01 அக்டோபர் 2026) விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.