கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழத்தின் (KDU) துணைவேந்தர் விமானப்படைத் தளபதியைச் சந்தித்தார்
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் (KDU) துணைவேந்தர், எயார்  வைஸ் மார்ஷல் இந்திக விக்ரமசிங்க,  (2026 அக்டோபர் 5) விமானப்படைத் தலைமையகத்தில், விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பின் போது, ​​இரு தரப்பினரும் பரஸ்பர ஆர்வம் கொண்ட விடயங்கள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்; குறிப்பாக, பயிற்சி மற்றும் கல்விச் செயல்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. இந்த இணக்கமான சந்திப்பு, கே.டி.யு (KDU) மற்றும் இலங்கை விமானப்படைக்கு இடையிலான ஏற்கனவே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது.

இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் வகையில், இரு தரப்பினரும் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டதோடு சந்திப்பு நிறைவடைந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை