போர்வீரர்கள் நினைவு நாளை முன்னிட்டு இலங்கை விமானப்படைத் தளபதிக்கு 'பாப்பி' (Poppy) மலர் அணிவிக்கப்பட்டது.
வரவிருக்கும் போர்வீரர்கள் நினைவு நாள் நிகழ்வுகளை முன்னிட்டு, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் (SLESA) 'பாப்பி' குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, இலங்கை விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களுக்கு 'பாப்பி' மலரை அணிவித்தார். இந்த நிகழ்வு 2026 அக்டோபர் 07 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த 'பாப்பி' மலர் பிரச்சாரமானது, கடமையின் போது உயிர்நீத்த முப்படைகளின் வீரர்களுக்கும், முன்னாள் படைவீரர்களுக்கும் செய்யப்படும் ஒரு மரியாதையாகும். 'பாப்பி' மலர்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம், ஓய்வுபெற்ற, காயமடைந்த மற்றும் ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன், சுகாதாரம் மற்றும் நிதி உதவிக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில், இலங்கை விமானப்படை சங்கத்தின் (SLAFA) தலைவர், ஓய்வுபெற்ற எயார்  வைஸ் மார்ஷல் ஹேமந்த சொய்சா, 'பாப்பி' குழுவின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை