உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தென்னேயாய ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மறக்க முடியாத விமானப் பயணம்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, மொனராகலை, பாதல்கும்புரவில் உள்ள தென்னேயாய ஆரம்ப பாடசாலை மாணவ மானவியர்களுக்கு , இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட "கனவுகள் சிறகடிக்கின்றன" என்ற சிறப்பு சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய திகதி நடைபெற்ற இந்த இரண்டு நாள் சுற்றுலாவின் போது, ​​மாணவர்களை இலங்கை விமானப்படையின் Y-12 ரக விமானத்தில் கொழும்பு மற்றும் களுத்துரை ஆகிய பகுதிகளை சுற்றி ஒரு சிறப்பு விமானப் பயணத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்.

மேலும், அவர்கள் தலைநகரின் முக்கிய அடையாளங்களான கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கொழும்பில் சுற்றுலா ஈர்ப்பாக மாறியுள்ள தாமரைக் கோபுரம் ஆகியவற்றை இரட்டை அடுக்கு பேருந்தில் சென்று பார்வையிட்டனர், மேலும் 'எக்செல் வேர்ல்ட்'  கலியாட்ட பூங்காவில் விளையாடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர், மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகளைக் கண்டு மகிழ்ந்தனர் .

இலங்கை விமானப்படையின் "கனவுகள் சிறகடிக்கின்றன" என்ற சிறப்புத் திட்டமானது, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல்  சம்பத் துயகொந்த அவர்களின் அனுமதியுடம் , விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழும், சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிரிஷாந்தி எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழும் ஏற்பாடு செய்யப்பட்டது.

1st Day

2nd Day

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை