மிரிகம இலங்கை விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியின் வருடாந்த ஆய்வு.
இலங்கை விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்கள், 2026 அக்டோபர் 12 அன்று மிரிகம இலங்கை விமானப்படை தளத்தில்   வருடாந்த தளபதி ஆய்வை மேற்கொண்டார். அங்கு வருகை தந்த அவரை, மிரிகம விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி, குரூப் கெப்டன் நிஷாந்த செனவிரத்ன அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

இந்த ஆய்வின் போது, ​​தளபதி அவர்கள் நிலையத் தலைமையகம், வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், அதிகாரிகள் உணவகம் (Officers’ Mess) உள்ளிட்ட நிலையத்தின் பல்வேறு முக்கிய இடங்களைப் பார்வையிட்டார். இந்த வருகையானது, நிலையத்தின் செயல்பாட்டுத் தயார்நிலை, நிர்வாகத் திறன் மற்றும் ஒட்டுமொத்த தரநிலைகளை மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.

இந்த ஆய்விற்காக, நிலையத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் பல நிறைவு செய்யப்பட்டன. இதில் வாரண்ட் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட  பணியாளர்களுக்கான (Senior Non-Commissioned Officers) உணவகத்திற்காக முன்னரே தயாரிக்கப்பட்ட (prefabricated) கட்டிடம் ஒன்றைக் நிர்மாணித்தலும், விமானப்படை வீரர்களுக்கான விடுமுறை இல்லத்தில் 'மீன் சிகிச்சை' (fish therapy) வசதியை அறிமுகப்படுத்தியதும் அடங்கும்.

தளபதி ஆய்வின் போது, ​​சிறப்பான சேவை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், தளபதி அவர்கள் பின்வரும் பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்:

கோப்ரல் கருணாதிலக்க எச்.டி.எஸ்.எஸ். (செயல்பாட்டு தரைப்படை III)
சிரேஷ்ட வான்படை வீரர்  ஜயசிங்க ஜே.ஏ.எஸ்.எம். (செயல்பாட்டு தரைப்படை I)

நிலையத்தில் பணியாற்றும் அனைத்து படைவீரர்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றிய தளபதி, வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தேசிய வான் பாதுகாப்பு அமைப்பின் மையப்புள்ளியாக (nerve centre) இது வகிக்கும் மிக முக்கியமான பங்கினை அவர் வலியுறுத்தினார். மேலும், இலங்கை விமானப்படையின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உயர் தொழில்முறைத் தரநிலைகளைப் பேணுதல், அர்ப்பணிப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆய்வின் நிறைவில், மிரிகம விமானப்படை நிலையத்தில் எதிர்பார்க்கப்படும் உயர் தரநிலைகளைப் பேணுவதற்காக, கட்டளை அதிகாரி மற்றும் அனைத்து பணியாளர்களும் காட்டிய அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் கூட்டு முயற்சிகளை தளபதி அவர்கள் பாராட்டினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை