கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் பௌத்த சமய விழா.
இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பௌத்த சமய வழிபாட்டு நிகழ்வு, 2026 அக்டோபர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்  கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில், விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி , திருமதி கிரிஷாந்தி எதிரிசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

விமானப்படைத் தளபதி, 2026 அக்டோபர் 22 ஆம் திகதி மாலையில் மல்வத்து மகா விகாரைக்கு வருகை தந்து , மகா விகாரை வன்சிக ஷ்யாமோபாலி மகா நிகாயத்தின் மல்வத்து மகா விகாரை பீடத்தின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான தேரரிடமிருந்து ஆசிகளைப் பெற்றார். அதன்பிறகு, அவர் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்று, மகா விகாரை வன்சிக ஷ்யாமோபாலி மகா நிகாயத்தின் அஸ்கிரி மகா விகாரை பீடத்தின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய வரககோட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த   ஞானரதனபிதான தேரரிமிருந்து ஆசிகளைப் பெற்றார்.

அதன்பிறகு, விமானப்படைத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று, ஸ்ரீ தலதா வழிபாடுகளையும் கிலன்பாச பூஜை செய்து ஆசிகளைப் பெற்றார், மேலும் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெலவையும் சந்தித்தார். அடுத்த நாள், இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சேவைப் பணியாளர்களின் பங்கேற்புடன் 75 பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விமானப்படைத் தளபதி, ஸ்ரீ தலதா மாளிகையின் பாதுகாப்பிற்காக விமானப்படையால் பயன்படுத்தப்பட்ட தீயணைப்புக் குழு, வாகனங்கள் மற்றும் உபகரணங்களையும் ஆய்வு செய்தார்.

விமானப்படை நலன்புரி பணிப்பகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பௌத்த சமய விழா, தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த விமானப்படைப் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும்,  சேவையில் ஈடுபட்டுள்ள விமானப்படைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஆசீர்வதிப்பதற்காகவும் நடைபெற்றது.

விமானப்படை பணிப்பாளர்கள் , விமானப்படை மூத்த அதிகாரிகள், இதர தரவரிசை வீரர்கள் மற்றும் மறைந்த விமானப்படைப் போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

First Day

Second Day
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை