இம்முகாமானது பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் இதன் பிரதான நோக்கம் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கு பாதுகாப்பையும் ,சேவைகளையும் வழங்குவதாகும். மேலும் இங்கு எம்.ஐ 24 கெலிகொப்டர்களை உள்ளடக்கிய இல.09 தாக்குதல் கெலிகொப்டர் பிரிவு மற்றும் இல.07 கெலிகொப்டர் பிரிவும் அமைந்துள்ள அதேநேரம் இதன் பிரதான நோக்கங்களாக யுத்தநடவடிக்கைகளில் தரைப்படையினருக்கு உதவுதல் ,படையினர்களுக்கு போக்குவருத்து வசதிகளை வழங்குதல்,பொதிகள் மற்றும் காயமுற்றோர்களை சுமந்து செல்லல் காணப்படுகின்றன. மேலும் இங்கு இல.02 விமானப்படை வினியோக மற்றும் பராமரிப்பு பிரிவும் நிறுவப்பட்டுள்ள அதேநேரம் இதன்மூலம் விமானப்படைக்கு தேவையான துணிவகைகள்,கட்டிடப்பொருட்கள்,இலத்திரனியற்பொருட்கள் உட்பட பலவிதமான பொருட்களும் வினியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் இங்கு பெல் 206,பெல்212 எனபனவும் காணப்படுவதோடு இம்முகாமின் கட்டளை அதிகாரியாக குறூப்கெப்டன் ஆர்.பி. லியனகே அவர்கள் செயற்ப்பட்டு வருகின்றார்.