இலங்கை விமானப்படையின் தொடர்ச்சியான நிவாரணப்பணிகள்
10:41am on Friday 14th January 2011
இன்று இலங்கை விமானப்படையானது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தேவையான அத்தியவசிய உலர் உணவுப்பொருட்களை வழங்கியது.

விமானப்படையின் M.I. - 17, பெல்- 212,காற்றாடி விமானங்கள் மற்றும் A.N. - 32 போக்குவருத்து விமானங்கள் மூலம் கொழும்பில் இருந்து நிவாரணப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டமை குறிபிடத்தக்க விடயமாகும்.

எனவே இதன் அடிப்படையில் அரிசி,பிஸ்கட்,சீனி,பால்மா, பருப்பு உட்பட மேலும் பல அத்தியவசிய நிவாரணப்பொருட்கள் சுமார் 6 டொன்கள் வரையில் அரச உதவி மற்றும் தனியார் நன்கொடைகளினால் சேகரிக்கப்பட்டு பின்வரும் பிரேதேசங்களுக்கு வினியோகிக்கப்பட்டன.அவையாவன,

1038 Kg. உலர் உணவு- மட்டக்களப்பு மாவட்டம்
800Kg. உலர் உணவு- சேறுநுவர பிரதேசம்
1800Kg. உலர் உணவு- கல்லாறு பிரதேசம்
1783 Kg.உலர் உணவு- கல்லாறு பிரதேசம்
750Kg.உலர் உணவு - கல்லாறு பிரதேசம் என்பனவாகும்.





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை