இலங்கை விமானப்படையின் விமானநிலைய முகாமின் 12 வது நிறைவு விழா
இலங்கை விமானப்படையின் விமானநிலைய முகாமானது தனது 12வது நிறைவு விழாவினை அண்மையில் கொண்டாடியது.இம்முகாமானது பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் 1998ம் ஆண்டு'எயார் கொமடோர் ' எம்.எல்.கே. பெரேராவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இந்நிகழ்வினையொட்டி 11- 01- 2011ம் திகதியன்று 'சாந்த ஜோஸப்'முதியோர் இல்லம்,'உன்னாருவ' சிறுவர் இல்லம்,'யடியன 'சிறுவர் இல்லம்  மற்றும் விஜேய குமாரதுங்க ஞாபகர்த்த வைத்தியசாலை போன்ற இடங்களில்சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,அவர்களுக்கான  விருந்துபசாரமும் எற்பாடு செய்யப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

மேலும் இவ்விழாவுக்காக ஒரு சிறப்பு அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் இதனை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' பீட்ரசன் பெர்னான்டுஅவர்கள் ஏற்றுக்கொண்டார்,இதனைத்தொடர்ந்து மரநடுகை வைபவம்,விளையாட்டு நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றமையினால் விழா மேலும் சிறப்பாக அமைந்தது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை