விமானப்படைக்கு வெற்றி
7:02pm on Monday 24th January 2011
இலங்கை விமானப்படையின் 60 ஆண்டு நிறைவுவிழாவுக்கு ஒரு சிறந்த ஆரம்பித்தினை வழங்கிய வண்ணமாக 12வது சைக்களோட்டப்போட்டி இன்று  கொக்கலையில் நிறைவடைந்தடன், இதில் விமானப்படையின் புத்திக வர்ணகுலசூரிய மற்றும் டினேஷ் டனுஷ்க ஆகியோர் தமது திறமையினை வெளிக்காட்டி முறையே 1ம், 2ம், இடங்களை பெற்று விமானப்படைக்கு பெருமை சேர்த்தனர்.

போட்டியின் இறுதி நாளான இன்று  கூட்டுப்படைகளின் பிரதானியும், விமானப்படைத்தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல் 'ரொஷான் குணதிலக கொழும்பு விமானப்படை தலைமையகத்துக்கு அருகாமையில் போட்டியினை ஆரம்பித்து வைத்ததுடன், போட்டியானது சுமார் 132 K.M. தூரத்தின கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயாமாகும்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பார்வையாளர்களின் ஒரு சிறந்த வரவேற்பு இருந்ததுடன், போட்டியின் முதல் அதிவேக சுற்றினை முதலாவதாக இரத்மலானையில் வைத்து விமானப்படையின் ஜீவந்த ஜயசிங்க கடந்ததுடன் அவரைத்தொடர்ந்து தென்மாகண கழகத்தைச்சேர்ந்த ஆசிரி கெலும் மற்றும் 'மிக்ஸ்' கழகத்தின் பி.ஜே. சுமனசேகர உட்பட விமானப்படையின் நிலங்க அப்புகாமி ஆகியோர் முறையே 2ம், 3ம், 4ம், இடங்களை பெற்றுக்கொண்டனர்.

எனினும் இரண்டாம் அதிவேக சுற்றான களுத்துரையை அடைந்ததும் போட்டி முற்றாக மாற்றமடைந்ததுடன், அச்சுற்றினை தரைப்படையின் டிலீப பிரபாத் முதலாவதாக கடந்ததுடன், அவைரைத்தொடர்ந்து விமானப்படையின் இசுறு பிரபாத் மற்றும் D.M.C.C. கழகத்தின் தனுஷ்க குமார உட்பட தரைப்படையின் சனத் ஜயசிங்க முறையே 2ம், 3ம், 4ம், இடங்களை பெற்றுக்கொண்ட அதேநேரம் டிலீப மற்றும் இசுறு ஆகியோர் தமது வேகத்தினை அளுத்கமையில் வைத்து இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியின் இறுதிச்சுற்று கொககலையை அடைந்தவுடன் தரைப்படையின்
மீமெனகே பெரேரா முதலாவதாக போட்டியினை நிறைவு செய்த அதேநேரம் அவரைத்தொடர்ந்து விமானப்படையின் டினேஷ் தனுஷ்க மற்றும் சுபர் வீல்ஸ் கழகத்தின் சுமித்ர பெர்னான்டு ஆகியோர் முறையே 2ம், 3ம், இடங்களை பெற்றுக்கொண்டதுடன், போட்டி நிறைவினை விமானப்படை சைக்களோட்ட கழகத்தின் தலைவர் ' எயார் வைஸ் மார்ஷல்' ககன் புலத்சிங்கள அவர்கள் அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதன் அடிப்படையில் 12வது விமானப்படை சைக்களோட்டப்போட்டியின் இறுதி முடிவுகள் பின்வருமாறு,

1.புத்திக வர்ணகுலசூரிய    - விமானப்படை             - 11:25:18 மணித்தியாலங்கள்
2.டினேஷ் தனுஷ்க               - விமானப்படை              - 11: 25: 20 மணித்தியாலங்கள்
3.தீபால் சில்வா                       - சுபர் வீல்ஸ் கழகம்    - 11:26:18 மணித்தியாலங்கள்
4.சுவாரிஸ் பிரேமசந்திர     -D.M.C.C.                             -  11:26:20 மணித்தியாலங்கள்

அதி வேகச்சுற்றின் வெற்றியாளார்கள்.

1.ஜீவன் ஜயசிங்க                  - விமானப்படை(A)     - 28
2.டினேஷ் டனுஷ்க              - விமானப்படை(B)    - 17
3.கேமந்த குமார                    - கடற்படை(A)             - 10
4.புத்திக வர்ணகுலசூரிய   - கடற்படை(A)            - 10
5.சனத் ஜயசிங்க                    - தரைப்படை(B)         - 10

சிறந்த அணி .

1.இலங்கை கடற்படை             -(A)
2.இலங்கை விமானப்படை    -(B)
3.இலங்கை தரைப்படை          - (A)
4.இலங்கை கடற்படை             - (B)
5.இலங்கை விமானப்படை    - (A)


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை