13வது விமானப்படைத்தளபதியின் பதவிப்பிரமானம்
8:40am on Thursday 3rd March 2011
'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம 13வது இலங்கை விமானப்படைத்தளபதியாக இன்று காலை அதாவது 27.02.2011ம் திகதியன்று ,விமானப்படை தலைமையகத்தில் வைத்து  தனது படை உறுப்பினர்களுக்கு மத்தியில்   பொறுப்பேற்றார்.

இங்கு இவர் உரையாற்றுகையில் தான் இலங்கை விமானப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டதில் மிகவும்  மகிழ்ச்சி அடைவதாகவும் ,எதிர்காலத்தில் விமானப்படையின் வெற்றிக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்ட அதேநேரம் விமானப்படையின் சக்தியினையும்,கூட்டுறவினையும் அதிகரித்து விமான நிர்வாக செலவினை குறைப்பதுடன் ,படை உறுப்பினர்களின் நலனிலும் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இவர் F-7 மற்றும்' கபீர்' தாக்குதல் விமானங்களின் விமானியாகவும் அது பற்றிய சிறந்த தொழிநுட்பவியலாளராகவும் இருந்துள்ளதோடு ,வடக்கு,கிழக்கு,மனிதாபிமான நடவடிக்கைகளில் கலந்துகொண்டமைக்காக 'ரண விக்ரம பதக்கம்' மற்றும் 'ரணசூர பதக்கம்' உட்பட 'உத்தம சேவா' பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

இதற்கு மேலதிகமாக 'சுபர் சோனிக்' தாக்குதல் விமானப்பிரிவு ,பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் மன்றக்கல்லூரியின் போஷகராகவும் ,மனிதாபிமான நடவடிக்கைகளின் முன்னோடியாகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.மேலும் இவரது கல்வி நடவடிக்கையினை பொறுத்தவரையில் ,லண்டன் பல்கலைக்கழகத்தில் ஓர் பட்டப்படிப்பினையும் ,சேர். ஜோன் கொதலாவலை பாதுகாப்பு கல்லூரியில் முகாமைத்துவ பட்டப்படிப்பினையும் ,லண்டன் றோயல் கல்லூரியில் பாதுகாப்பு சேவை படிப்பினையும் மேலும் வர்த்தக விமானி அனுமதிப்பத்திரத்தினையும் பெற்றுள்ளமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இவர் றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன்,அல்பமா விமான கட்டளை மற்றும் மன்ற கல்லூரியின் பட்டதாரியும் ஆவார்.அதேபோன்று இவர் பௌத்த தத்துவத்தில் தேற்ச்சி பெற்றவராகவும் அதுதவிர இசை, 'கொல்ப் விளையாட்டு போன்ற துறைகளிலும் ஆர்வமிக்கவராகவும் விளங்குகிறார். இறுதியாக இவர் சட்டத்தரணி திருமதி.நீலிகாவினை மணமுடித்துள்ளதோடு ,இவர்களுக்கு  ஓர் பட்டதாரி புதல்வரும் உள்ளார்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை