'ரணவிரு ரியல் ஸ்டார்' போட்டியில் விமானப்படையின் திறமைகள் - 2011
11:11am on Wednesday 6th April 2011
இலங்கை விமானப்படையின் "பிளையின் ஒபிஸர்" சாரங்க கிரிஷாந்த அவர்கள் பல சவால்களையும் ,தடைகளையும் தாண்டி இறுதி 10 போட்டியாளர்களுக்குள் நுழைந்துள்ளதுடன்,தனது பிரதிவாதிகளுக்கு ஒரு கடும் போட்டியினை வழங்கவும் தயார் நிலையில் உள்ளார் .

எனவே தங்கல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட "பிளையின் ஒபிஸர்"சாரங்க கிரிஷாந்த அவர்கள் தனது தந்தையின் உதவியுடன் சிறு பிராயத்தில் இருந்தே சங்கீதக்கலையில் தேர்ச்சி பெற்று இருந்ததுடன்,தேசிய சங்கீத பாடசாலையினால் வழங்கப்படும் "கேவூட்" சான்றிதளை பெற்றுள்ளதோடு இந்திய இசைக்ககலையினையும் கற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இவர் தனது கல்வியினை வீரகெடிய ராஜபக்ஷ மத்திய கல்லூரியில் பயின்றதுடன் ,க.பொ.த.(ச.தரம்), க.பொ.த.(உ.தரம்) போன்ற பரீட்சைகளிலும் சங்கீதத்துக்கான உயர் பெறுபேறுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவர் 2000ம் ஆண்டு கட்புலன் மற்றும் கலைச்செயற்பாட்டு பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றுள்ளதோடு ,வயலீன் மற்றும் பாடும் திறன்களை இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னால் இசை இயக்குனர் சோமசிரி இலேசிங்க அவர்களுடன் இணைந்து வளர்த்துக்கொண்டதுடன் ,பல விருதுகளையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் 2007ம் ஆண்டு விமானப்படையின் ஓர் "கெடெட்" அதிகாரியாக இணையும் வரையில் ,பல்வேறுபட்ட திறமைகளை தனது பல்கலைக்கழக வாழ்க்கை தொடக்கம் நிறைவேற்றியதுடன் ,தற்போது இலங்கை விமானப்படையில் சங்கீதத்தை தனது ஒரு தொழிலாக நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு "ரணவிரு ரியல் ஸ்டார்" தொடங்கியவுடன் அதில் பங்கு பற்ற வேண்டும் என்ற ஒரு தேவை இவருக்கு இருக்காவிடினும் ,இவரது மேல் அதிகாரியான "ஸ்கொட்ரன் லீடர்" மகீல் சந்தன அபேசின்கவின் கட்டாயப்படுத்தலுக்கு இணங்க இதில் பங்குபற்றியதுடன் இன்று இதன் முடிவு தற்போது வரைக்கும் நல்லதாகவே இருக்கின்றது.

எனவே தற்போது போட்டியில் பின்னோக்கிச் செல்ல எந்த தேவையும் இவருக்கு இல்லை ஏனெனில் இவரது விருப்பமான பாடகர்களான விக்டர் ரத்னாயக ,சுனில் எதிரிசிங்க, பண்டித் அம்ரதேவ, மேர்வின் பெரேரா, உட்பட  கசுன் கல்கார, அமல் பெரேரா, சாமிக சிரிமான போன்ற இளம் பாடகர்களின் பாடல்களை பாடுவதோடு ,குறிப்பாக இவர் பண்டித் அமரதேவ அவர்களின் "படாசார" திரைப்படத்தின் "தன்கா ஆஷா" பாடலையும் இப்போட்டியில் விரும்பி பாடி வருகின்றார்.

இறுதியாக விமானப்படை அங்கத்தவர்களினதும், அவரது குடும்பத்தினரதும் ஆதரவு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும் அதேநேரம் உங்களது ஆதரவினையும் RSS 13 என டைப் செய்து 7770 க்கு SMS செய்தி ஊடாக வழங்க முடியும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை