கிளிநொச்சி விமான ஓடு பாதை திறப்பு.
9:32am on Tuesday 26th July 2011
கிளிநொச்சியில் முன்னர் விடுதலை புலிகள் வசமிருந்த பகுதியில் விமானப்படையினர்
விமான ஓடு பாதை ஒன்றினை திறந்துள்ளனர் இந்த விமான ஓடு பாதையில் விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம முன்னிலையில் நேற்றுக்காலை
விமானப்படையினரின் வை 12 ரக விமானமொன்று தரையிரங்கியது .

முன்னர் இந்த விமான ஓடு பாதையின் சிறிய பகுதி விடுதலைப் புலிகளால்
பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் தற்போது இந்த விமான ஓடு பாதை புனரமைக்கப்பட்டு
வை 12 மற்றும் கெலிகொப்டர்கள் போன்றவை தரையிரங்க பயன்படுத்தப்படவுள்ளமையும்
குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்த விமான ஓடு பாதையானது இரணமடுவுக்கு வடக்கே கிளிநொச்சியிலுள்ள இராணுவ படைத்தலைமயகத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் ஏ- 9 வீதியில் இருந்து 7 கிலோ மீற்றர் தூரத்திலும் உள்ளமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இந்த விமான ஓடு பாதையில் மிக விரைவில் விமானப்படையின் "ஹெலி
டுவர்ஸ்"விமானசேவை இயங்கவுள்ளதாகவும் இதன் உட்கட்டுமான பணிகள் விரைவில்
புனரமைக்கப்படவும் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வுக்கு தரைப்படை விஷேட படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல்
நந்தன உடவத்த மற்றும் இரணமடு முகாமின் கட்டளை அதிகாரி விங்கமான்டர் ஹைலி
ரூபசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை