விமானப்படை அங்கத்தவர்களுக்கான அலங்கார கருத்தரங்கு
இலங்கை விமானப்படை பெண் அங்கத்தவர்களுக்கான அலங்கார கருத்தரங்கு கடந்த 08.08.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை கடுநாயக்க முகாமினில் இடம்பெற்றது.

மேலும் இக்கருத்தரங்கானது ஆளுமை விருத்திற்கான இமேஜ் கல்லூரியின் ஸ்தாபகரும், சலூன் நயனாவின் உரிமையாளருமான திருமதி. நயனா கருனாரத்ன அவர்களினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு ஒரு தாய், பெண், மனைவி என்ற வகையில் தமது கடமைகளை எவ்வாறு மேற்கொள்வது அதாவது விழாக்களை ஒழுங்கமைத்தல், உணவு பராமரிப்பு, சுகாதார பராமரிப்பு, உடை அணிதல் போன்றவைகள் கற்பிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இந்நிகழ்வுக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம மற்றும் விமானப்படை அதிகாரிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை