
தென் சூடானில் அமைதிக்காக்கும் படைப்பிரிவில் கடமை புரியும் இலங்கை விமானப்படையின் 04 ம் படை அணியினரின் சமூகசேவை திட்டம்
தென் சூடானில் அமைதிக்காக்கும் படைப்பிரிவில் கடமை புரியும் இலங்கை விமானப்படையின் 04 ம் படை அணியினரின் ஜங்களே மாநிலத்தின் போர் நகரில் அமைந்துள்ள சிறுவர் அநாதை இல்லத்திற்கு சமூகசேவை திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்வுகள் இலங்கையின் 72 வது சுதநதிர தினத்தை முன்னிட்டு இந்த சமூகசேவை திட்டம் அதன் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் குலதுங்க அவர்களின் வழிகாட்டலில் கீழ் இடம்பெற்றது .
இந்த அனாதை இல்லம் 2020 ம் ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது இந்த சிறுவர் அநாதை இல்லத்தில் 55 சிறுவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிட்டதக்கது . அனாதை இல்லத்தின் வேண்டுகோளின் பேரில், இலங்கை விமானப்படை ஒரு ஜெனரேட்டரை குழந்தைகள் அனாதை இல்லத்திற்கு வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் தென் சூடான் கள அலுவலகத்தின் தலைவர் டெபோரா ஷ்னைன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஐக்கிய நாடுகளின் கள நிர்வாக அதிகாரி லிபன் ஹஜ்ஜி, ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர், படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் ஜெனரேட்டருடன் மேலதிகமாக அத்தியாவசிய உணவு பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பள்ளி உபகரணங்கள் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
மேலும் ஜெனரேட்டருடன் மேலதிகமாக அத்தியாவசிய உணவு பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பள்ளி உபகரணங்கள் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.







