இலங்கை விமானப்படையின் 70 வது வருட நிறைவை முன்னிட்டு காலி முகத்திடலில் விமான சாகச நிகழ்வுகள்.
3:00pm on Monday 26th July 2021
இலங்கை விமானப்படையின் 70 வது  வருட நிறைவு மார்ச் 02ம்  திகதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது   இதனை முன்னிட்டு  காலி  முகத்திடலில்  விமான சாகச நிகழ்வுகள்  இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாபதிபதி  கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் விமானப்படை விமானங்கள் பெருமிதத்துடன் இணைத்துக்கொண்டன.

இலங்கையில்  விமானப்படையானது 1951 ம் ஆண்டு மார்ச் 02 ம் திகதி  ஐக்கிய இராஜதானிய விமானப்படையாக ஆரம்பிக்கப்பட்டது 1972 ம் ஆண்டு மே 22 ம் திகதி  இலங்கை  விமானப்படையாக மாற்றமடைந்தது 06 அதிகாரிகள் மற்றும் 24 படைவீரர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய இராஜதானிய விமானப்படை 20 கிளைகள் மற்றும் 73 தொழில் பிரிவுகளுடன் 34000 அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உள்ளடங்கலாக விரிவாக்கம் அடைந்து தற்போது காணப்படுகின்றது

தற்போது இலங்கை விமானப்படையில்  கஃபீர், F-7 போன்ற போர் விமானங்களும், AN 32, C130, MA 60, Y12 போன்ற நீண்ட தூர விமானங்களும் , பெல் 212, பெல் 412, MI17 மற்றும் MI24 போன்ற ஹெலிகாப்டர்களும் அடங்கலாக முழுமையாக தொழில்நுட்ப ரீதியாகவும்   மனித வளத்திலும் முன்னேறியுள்ளது  ஒரு பாதுகாப்பு படையாக   தாய்நாட்டின் பாதுகாப்பிற்கான தனது பணியை நிறைவேற்றி வருகிறது.

இந்த சாகச நிகழ்வை பார்வையிட இந்திய தூதரகத்தில் தூதுவர் கௌரவ கோபால் பால்கி மற்றும் மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப்பி தி எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  கமால் குணரத்ன மற்றும்  இராணுவ கடற்படை தளபதிகள்  உற்பட பங்களாதேஸ் விமானப்படை தளபதியும்  பங்கேற்றனர்.
.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை