இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் விமானப்படை யின் புதிய தலைமை அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் கடந்த 2021 மார்ச் 09ம் திகதி நியமிக்கப்பட்டார்.
எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் இலங்கை விமானப்படையில் கடேட் அதிகாரியாக பொது விமானிய 1985 ம் ஆண்டு இணைந்துகொண்டார் அவர் தியத்தலாவ அடிப்படை போர்ப்பயிற்சி பாடசாலையில் அடிப்படை பயிற்சியையும் விமானப்பயிற்சியை சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்திலும் பாக்கிஸ்தான் விமானப்படை தளத்திலும் பெற்றுக்கொண்டார்.
பாகிஸ்தான் பயிற்சிகளின் பின்பு இலங்கை விமானப்படையின் இல 04 ம் ஹெலிகாப்டர் படைப்பிரிவில் கடமையாற்றினார் மேலும் நாட்டில் இடம்பெற்ற பயங்காதவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் தனது பங்களிப்பையும் வழங்கி இருந்தார்
இதுவரை சுமார் 7200 மணித்தியாலம் வானில் விமானியாக பறந்துள்ளார் அவர் கட்டு குருந்த மற்றும் கொழும்பு ஆகிய படைத்தளங்களின் கட்டளை அதிகாரியாகவும் இரண்டு சந்தர்ப்பங்களில் சப்புகஸ்கந்த விங்கின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி வான் பிரிவில் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றினார்.
விமானப்படையின் பிரதான படைத்தளங்களான வவுனியா மற்றும் கட்டுநாயக்க ஆகிய தளங்களிலும் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றுள்ளார் அவரது தொழில் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக ரஷ்ய கூட்டமைப்பிற்கு இலங்கை பாதுகாப்பு இணைப்பாக நியமிக்கப்பட்டது. 2019 ம் ஆண்டு விமானப்படையின் பயிற்சி பணிப்பளராகவும் அதனை தொடர்ந்து வான் செயற்பட்டு பணிப்பாளராகவும் தற்போது விமானப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்கின்றார்.