இலங்கை விமானப்படையானது சம்பிரதாய முறைப்படி டோனியர் 228 ரக விமனாத்தை கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொண்டது
9:09am on Wednesday 17th August 2022
அண்டை நாடான இந்தியாவுடனான தோழமையை முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வழியாக கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்களின்   மேற்பார்வையின் கீழ் சசம்பிரதாய முறைப்படி   கடந்த 2022 ஆகஸ்ட் 15 ம்  திகதி முதல் இந்திய கடற்படை டோனியர் 228  ரக விமானம்   இணைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின்  அதிமேதகு  ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க மற்றும்இலங்கைக்கான  இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ கோபால் பால்கெ  ஆகியோர் கலந்துகொண்டனர்

அதிதிகளை இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் நுழைவாயிலில் நின்று வரவேற்றார்  இதன்போது இலங்கை விமானப்படையின் வர்ண அணிவகுப்பு  படைப்பிரிவினால் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை  வழங்கப்பட்டது இந்த நிகழ்வுகள் இல 02  கனரக போக்குவரத்து படைப்பிரிவில் இடம்பெற்றது.

அதன்பின்பு டோனியர் 228 ரக விமானத்தினால் பிரதம அதிதிக்கு முதல் மரியாதையை செலுத்தப்ட்டதுடன்  மெதுமெதுவாக  இல 02  கனரக போக்குவரத்து படைப்பிரிற்கு வந்துசேர்ந்தது இதன்போது இரண்டு தீயணைப்பு வாகனம் மூலம்  நீர்மழை பொலிந்து விமானம் வரவேற்கப்பட்டது இந்த முறைமையானது வெற்றி இராணுவ வீரர்கள், வெளிநாட்டு உயரதிகாரிகள் மற்றும் ஓய்வுபெறும் விமானங்களை கௌரவிக்கும் வகையிலலும்  புதிய விமானங்களை வரவேற்கும் வகையிலும்  ஒரு சடங்கு மற்றும் குறியீட்டு சைகையாக விமானத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு  கௌரவிக்கும்  அற்புதமான பாரம்பரியத்தை இது குறிக்கிறது.

டோனியர் 228 ரக விமானம் அதன் புதிய வீட்டிற்கு வந்தடைந்த பின்னர், இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர்   விமானப்படைத் தளபதியினால் விமானத்தின் உட்புறத்தை ஆய்வு மேற்கொள்ள  செய்யச் சென்றனர்.அதன் பின்னர், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன வரவேற்பு உரையுடன் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். இதன்போது  இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய கடற்படைக்கும்  நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்த நிகழ்வின் மூலம்  புதிய அத்தியாயத்தை இன்று வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.

இந்திய உயர் ஸ்தானிகர் பின்னர் சிறப்புரையாற்றினார், அங்கு அவர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய உறவைப் பற்றி பேசினார். இறுதியாக  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு .  ரணில் விக்கிரமசிங்கஎ அவர்கள் இந்த நிகழ்வில் உரையாற்றியபொது இலங்கையின்  தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கு இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய கடற்படைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்தார். மேலும், இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கை விமானப்படை தளபதியினால்  வருகை தந்த பிரமுகர்க்ளுக்கு டோனியர் விமானத்தை யொற்ற  சினைவுசின்னக்கள்  வழங்கி கௌரவிக்கப்பட்டது

இந்த நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஜனாதிபதியின் ஆலோசகர் திரு சாகல ரத்நாயக்க,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்  மேலும்  இராணுவ தளபதி கடல்படை தளபதி  மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, இந்திய கடற்படையின் பிரதித் தளபதி , வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், விமானப்படை மேலாண்மை வாரிய சபை உறுப்பினர்கள், இந்திய பாதுகாப்பு உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர், கப்டன் விகாஸ் சூட், இந்தியாவில் இருந்து  வருகை தந்த  பாதுகாப்புப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அரசாங்க அதிகாரிகள்.ஆகியோர் பங்குபற்றினர்

இந்த டோனியர் 228 ரக விமானத்தை  ஓடு பாதையின் மூலம் இயக்கும் வகையிலான  டர்புபர் ரக இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட சாதாரண போக்குவரத்து விமானமாகிய இந்த விமானம் 1981 காலகட்டத்தில் ஜெர்மன் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டது  1981 தொடக்கம் 1998 காலப்பகுதி வரை ஜெர்மனியினால் சுமார் 245 விமானங்கள் நிர்மாணிக்கப்பட்டன அதன் பின்பு ஹிந்துஸ்தான் விமான உற்பத்தி நிறுவனத்தினால் டோனியர் அனுமதி பத்திரத்தின் கீழ்   1993 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த விமானங்கள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன

 டோனியர் 228 ரக  விமானத்தினை  இலங்கை விமானப்படையினர் இந்தியாவில் நான்கு மாதம் விசார பயிற்சிகள் பெற்ற விமானிகள் மேற்பார்வையாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய 15 குழுக்கள் மூலம் இந்தியாவின் தொழில் நுட்பவியலாளர்களின்  மேற்பார்வையின் கீழ்  இயக்குவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

இந்த  ரக விமானங்கள்மூலம்  இலங்கையின் வான் பரப்பு மற்றும் கடல் பரப்புக்குள்  விமான கண்காணிப்பின் மூலம்  கடல் சார் கண்காணிப்பு செயற்பாடுகள் , தேடுதல் மற்றும் மீட்பு செயற்பாடுகள்  கடல் மாசு படுத்தும் செயற்பாடுகள் மற்றும் பரிபாலனை செயற்பாடுகள், இன்பவற்றுக்காக வான் சக்தியினை பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பினை இலங்கை விமானப்படையினர்கள் உறுதிப்படுத்தி கொண்டு இருக்கின்றனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை