இலங்கை விமானப்படையின் 42வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் முள்ளியவளையில் இடம்பெற்றது
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் முல்லைத்தீவு விமானப்படை தளத்தின் மூலம் முல்லைத்தீவு முள்ளியவளை ஆரம்பப் பாடசாலையில் கடந்த செப்டம்பர் 30 ம் திகதி 42வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
மாணவர்களின் குடிநீர் தேவைக்காக நீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது பூர்த்தி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு வசதிகள் அடங்கிய தொகுதி முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் அஷாத் லியனாராச்சிகே அவர்களினால் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் முல்லைத்தீவு விமானப்படையினால் வழங்கிவைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்