வானின் பாதுகாவலர்காளான 72 வது வருட நிறைவை கொண்டாடும் இலங்கை விமானப்படை
இலங்கை விமானப்படை தனது 72வது ஆண்டு விழாவை 2023 மார்ச் 02 அன்று அனைத்து விமானப்படை தளங்களுடனும் உத்தியோகபூர்வமாக கொண்டாடியது. விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன தலைமையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ அணிவகுப்புடன் இதன் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பணிப்பகத்தின் நேரடி ஒளிபரப்பு தொழில்நுட்பத்தின் மூலம் விமானப்படை தலைமையகத்தில் இருந்து அனைவருக்கும் விமானப்படை பணியாளர்களுக்கும் விமான தளபதி உரையாற்றினார். இதன்போது அதிஉயர் உயிர் தியாகத்தை செய்த அல்லது காயங்களினால் ஊனமுற்ற இலங்கை விமானப்படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி மற்றும் அவர்களை நினைவுபடுத்தி விமானப்படைத் தளபதி தனது உரையை ஆரம்பித்தார்.உலகம் கண்டிராத மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றைத் தோற்கடித்து, நமது தீவில் நித்திய அமைதியைக் கொண்டுவருவதற்கான உறுதிப்பாட்டின் மூலம் விமானப்படைக்கு அதிகாரம் அளித்த முன்னாள் விமானப்படைத் தளபதிகள், அதிகாரிகள், பிற அணிகள் மற்றும் பொதுமக்களையும் அவர் நினைவுபடுத்தினார் இலங்கை விமானப்படையின் அங்கத்தவர்கள் என்ற வகையில், தேசத்தை கட்டியெழுப்புவதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும் என்பதை அவர் அனைவருக்கும் நினைவூட்டினார். மேலும், மகத்துவத்தை அடைவதற்கான பயணம் முழுவதும் எங்களை வழிநடத்திய நமது முக்கிய திறன்களில் உறுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வெளிப்படுத்தினார். இலங்கை தாயின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக முழு நாடும் எதிர்நோக்கும் இந்த சவாலான நேரத்தில் தேசத்தின் சிறந்த நன்மைக்காக அனைவரும் மிகுந்த தொழில்முறை, தேசபக்தி மற்றும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் இறுதியாக வலியுறுத்தினார்.