அமெரிக்க பாதுகாப்புப் படையின் உறுப்பினர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களுடன் அறிவுப் பகிர்வு அமர்வை நடாத்தினர்.
மனித உரிமைகள் நடமாடும் பயிற்சிக் குழு (MTT) மற்றும் கடல்சார் சட்ட நிறுவன திறன் உருவாக்கம் (ICB) தொடர்பான விசேட பயிற்சித் திட்டம் அண்மையில் இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது
லெப்டினன்ட் கமாண்டர் ஸ்டீபன் பிரையன்ட், லெப்டினன்ட் கமாண்டர் பிலிப் ப்ரூடர் மற்றும் லெப்டினன்ட் சக் பால் உட்பட சர்வதேச சட்டக் கற்கைகள் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த திட்டம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய பகுதிகளைக் கொண்டிருந்தது: அவற்றுள் மனித உரிமைகள், சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைக்கு எதிரான உரிமைகள், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல், சட்ட அமலாக்கத்தில் பலத்தைப் பயன்படுத்துதல். சர்வதேச ஆயுத மோதல் மற்றும் சட்டம், ஈடுபாடு மற்றும் இலக்கு விதிகள். என்பன உள்ளடங்குகின்றது விமானப்படையின் சார்பில் இல 03 கடல்சார் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சந்தன ரத்நாயக்க அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.