பாணந்துறை கடற்கரையில் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) பயிற்சி இடம்பெற்றது
இலங்கை விமானப்படையின் இல 07 படைப்பிரிவு மற்றும் இலக்கம் 04 தேடல் மற்றும் மீட்புப் பயிற்சிப் படைப்பிரிவு  மற்றும் விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவு ஆகியன இணைந்து  கடத்த  29 மார்ச் 2023 அன்று பாணந்துறை கடற்கரையில்  தேடுதல் மற்றும் மீட்பு (SAR) பயிற்சியை நடத்தியது.

ஹிகுராக்கொட விமானப்படைத் தளத்தின் இலக்கம் 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவின் பெல் 212 ஹெலிகொப்டரின் பங்குபற்றுதலுடன் ரெஜிமென்டல் சிறப்புப் படைப் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து இந்த பயிற்சி நடத்தப்பட்டது.இந்த மீட்புப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் விரைவு நடவடிக்கை கப்பல் படை, கடற்படை டைவிங் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சித் திட்டத்தில் வின்ச் செயற்பாடு  மற்றும் கயிறு மீட்பு நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் இந்த முறை வெள்ளம் மற்றும் கடலில் அகப்பட்டோரை  தேடி மீற்க்கும்  நடவடிக்கையும் இடம்பெற்றது. நாட்டில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள விமானப்படையின் பல முகாம்களில் ரெஜிமென்ட் சிறப்புப் படை துருப்புகள் மற்றும் ஹெலிகாப்டர் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

விமான நடவடிக்கை பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன மற்றும் தரை நடவடிக்கை பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன ஆகியோரின் பணிப்புரையின் பிரகாரம், இலக்கம் 7 ஹெலிகொப்டர் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சமீர விதானபத்திரன மற்றும் ரெஜிமென்ட் சிறப்புப் படைகள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சுமித் பண்டார, ஆகியோரின்மேற்பார்வையின்கீழ் இந்த பயிற்சிகள் இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை