ஜப்பான் -ஸ்ரீலங்கா நட்புறவு சங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடை திட்டம்
ஜப்பான் -ஸ்ரீலங்கா நட்புறவு சங்கத்தின்  திரு.கொடோ  கிடேகி மற்றும் கிரேவ் ஆகியோரினால் இரண்டு ஸ்கை ஏணிகள் மற்றும் ஒரு தீயணைப்பு இயந்திரம் உற்பட விமானப்படை பணியாளர்களின் குழந்தைக்ளுக்கு உதவித்தொகை மற்றும் வாசிப்பு கண்ணாடிகள்  என்பன  கடந்த 2023 மே 22ம்  திகதி  விமானப்படை தலைமையகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது

வர்ணமயமான வரவேற்புடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் இரண்டு ஸ்கை ஏணிகள் மற்றும் ஒரு தீயணைப்பு இயந்திரம் என்பன  விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் விமானப்படை வான் செயற்பாட்டு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன மற்றும் விமானப்படை  தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

ஜப்பான்-லங்கா நட்பு சங்கம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றுக்கு இடையிலான நட்பு 2015 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது, மேலும் 10 தீயணைப்பு வாகனங்கள், எட்டு ஆம்புலன்ஸ், மூன்று டர்ன்டபிள் ஏணி வாகனங்கள் மற்றும் ஒரு தீயணைப்பு கார் ஆகியவற்றின் தாராளமான நன்கொடைகளால் பலப்படுத்தப்பட்டுள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை