"குவன் குணதகம் " இரண்டாம் கட்டத்திட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன மற்றும் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை விமானப்படை தளங்களில் பணிபுரியும்  சேவை மற்றும் சிவில்  உத்தியோகத்தர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட"குவன் குணதகம் " திட்டத்தின் இரண்டாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

அனைத்து விமானப்படை தளங்களில் பணிபுரியும் சிவில்  ஊழியர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த சம வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், வீடமைப்பு சீரமைப்பு மற்றும் சுயதொழில் திட்டங்களுக்கு மிகவும் பொருத்தமான ஐந்து பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதற்காக விமானப்படைத் தலைமையகத்தின் சேவை வனிதா பிரிவின் "குவன் குணதகம் "" என்ற கருத்தின் கீழ் பின்வரும் சிவில் பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அனைத்து திட்டங்களும் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு அந்தந்த பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

திரு.கே.ஆர்.எம்.துமிந்துபால  -கட்டுநாயக்க   விமானப்படை  தளம்
திரு. ஏ. குருகே  - ஹிகுரக்கொட விமானப்படைத் தளம்
திரு. NGT சந்தன -  இரத்மலானை,விமானப்படை தளம்
திரு.பி.என்.பெரேரா - அம்பாறை விமானப்படை தளம்
திரு. K.W.R குமார் - கட்டுகுருந்த
  

SLAF Base Katunayaka

SLAF Base Hingurakgoda

SLAF Base Rathmalana

SLAF Station Ampara

SLAF Station Katukurunda  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை