தரைவழி செயல்பாட்டுத் துறை சார்ந்த பணியாளர்க்ளுக்கான ஆலோசனைப் பயிற்சித் திட்டம்
1:40pm on Tuesday 30th May 2023
தரைவழி செயல்பாட்டுபணிப்பகத்தின்  வேண்டுகோளுக்கு இணங்க, சுகாதார சேவைகள்பணிப்பகத்தினால்  கடந்த 2023 மே 10 முதல் மே 26 வரை கட்டுநாயக்க விமானப்படை மருத்துவமனையில் 16 நாள் ஆலோசனை அறிமுக நிகழ்ச்சியை நடத்தியது. இலங்கை விமானப்படையின் பல்வேறுபடைத்தளங்களை சேர்ந்த தரைவழி செயல்பாட்டுத் துறை சார்ந்த  கனிஷ்ட ஆணையிடப்படாத அதிகாரிகள்,  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் உடனடி ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவதற்கும், அதன் மூலம் பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். ஆலோசனைக்கான அறிமுகம், ஆலோசனையின் நெறிமுறைகள், சிக்கலைக் கண்டறிதல், நேர்காணல் திறன், அசாதாரண நடத்தைகளைப் புரிந்துகொள்வது போன்ற தலைப்புகள் இந்த பட்டறையில் இடம்பெற்றன.

விரிவுரைகள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் ஆகிய இரண்டும் அடங்கிய பயிற்சி நிகழ்ச்சியை விமானப்படையின் அனுபவம் வாய்ந்த உளவியலாளர்களான விங் கமாண்டர் சுசில் பிரேமரத்ன, விங் கமாண்டர் கே.பி.எஸ்.எஸ் லக்ஷ்மி, விங் கமாண்டர் சந்தன ஏக்கநாயக்க, பிளைட் லெப்டினன்ட் அரோஷ ராஜபக்ஷ மற்றும் பிளின்ட் பாஷினி பண்டார ஆகியோர் நடத்தினர். ஒரு மதிப்பீட்டு செயல்முறை நடத்தப்பட்டது, மேலும் தேவைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கு ஆலோசனை பயிற்சியை முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை