விமானப்படையினால் இயற்கை,மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
12:30pm on Friday 9th June 2023
ஆண்டுதோறும்   ஜூன் 05ம் திகதி உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை விமானப்படை தளங்களினால் தூய்மையான மற்றும் பசுமையான சூழலை உயர்த்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளன

முல்லைத்தீவு விமானப்படைதளத்தினால்  வளாகத்தில் சுமார் 200 முந்திரி மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை 2023 ஜூன் 5 ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சியானது சென்ட்ரல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தாராளமான நன்கொடையின் மூலம் சாத்தியமானது.

அதேபோன்று, யுனெஸ்கோவின் பட்டியலிடப்பட்ட உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற சிகிரியா கோட்டையில் துப்புரவு பணிகள்  ஏற்பாடு  சிகிரியா விமானப்படை தளத்தின்  முயற்சியில்  மேற்கொள்ளப்பட்டது . மத்திய கலாச்சார நிதியத்துடன் இணைந்து இந்தப் துப்பரவு பணிகள்  நடத்தப்பட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் அர்ப்பணிப்புள்ள முயற்சியை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறான  நிகழ்ச்சிகளின் மூலம், இயற்கையின்  மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சாதகமான பங்களிப்பை விமானப்படை  மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை