
சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி மேல் மாகாண ஆளுநரை சந்தித்தார்.
தனது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை வழியனுப்பு வைக்கும் முகமாக மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ரோஷான் குணத்திலக அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 2023 ஜூன் 28ம் திகதி ஆளுநர் அலுவலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.








இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இலங்கை விமானப்படை தளபதி தான் பதவி வகித்த காலத்தில் இலங்கை விமானப்படைக்கு வழங்கிய ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் இருவருக்கும் இடையிலான நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் ஆளுநர் தனது வாழ்த்துக்களையும் விமானப்படை தளபதிக்கு தெரிவித்தார்.







