தியத்தலாவ விமானப்படை தளத்தின் 71வது வருட நிறைவுதினம்
11:57pm on Thursday 26th October 2023
இலங்கை விமானப்படை தியத்தலாவ போர் பயிற்சிப் பள்ளி தனது 71வது ஆண்டு நிறைவை 15 அக்டோபர் 2023 அன்று கொண்டாடுகிறது கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வஜிர சேனாதீர அவர்களின் பணிப்புரையின் பிரகாரம் சகல அதிகாரிகள், ஏனைய பதவிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சமூக பாதுகாப்பு செயற்திட்டங்கள் மற்றும் சமய நிகழ்வுகளுடன் இணைந்து கொண்டாடினர்.

ஆண்டு நிறைவு விழாவுடன் தியத்தலாவை பேருந்து நிலையம் மற்றும் "ஈகிள்ஸ் நெஸ்ட்" சிறுவர் பூங்காவில் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இது தவிர, தியத்தலாவ மத்திய கல்லூரி, தியத்தலாவை நில அளவை மற்றும் மேப்பிங் நிறுவனம், தியத்தலாவை ரயில் நிலையம், ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலை, ஹப்புத்தளை மகா வித்தியாலயம் போன்ற அரச நிறுவனங்களுக்கும் பலா மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலக அறை, புதிதாக விரிவுபடுத்தப்பட்ட சிற்றுண்டிச்சாலை மற்றும் முன்பள்ளிக் கட்டிடத்திற்கான உடற்பயிற்சி கூடம் என்பன திறந்து வைக்கப்பட்டன.பின்னர் அனைவரின் பங்கேற்பில் மத வழிபாடுகளும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை