அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் விமானப்படை தளபதிக்கும் இடையிலான சந்திப்பு
ரியர் அட்மிரல் லோயர் ஹாஃப் ஜெரோம் வில்லியம் மற்றும் அமெரிக்காவின் தூதுக்குழுவினர் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை நவம்பர் 08, 2023 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். தூதுக்குழுவின் தலைவரை கொழும்பு, இலங்கை விமானப்படைத் தளத்தின் பதில் கட்டளைத் தளபதி எயார் கொமடோர் சமிந்த விக்கிரமரத்ன வரவேற்றார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல் போன்ற பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு விவகாரங்கள் குறித்த சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர், விமானப்படைத் தளபதி மற்றும் பிரமுகர்களுக்கு இடையில் நினைவுப் பரிசுப் பரிமாற்றமும் இடம்பெற்றது.