இலங்கை விமானப்படை தளபதியினால் விமானப்படையின் சிறந்த விளையாட்டு வீரவீராங்கனைகள் கௌரவிப்பு.
6:11pm on Thursday 23rd May 2024
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் விமானப்படை விளையாட்டு சம்மேளன தலைவர் என்றவகையில் கடந்த 2024 மார்ச் 26ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற விமனப்படையை சேர்ந்த  சிறந்த விளையாட்டு வீர்ரகளை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு  விருதுகளை வழங்கிவைத்தார்.

இதன்போது  தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாம்பியன்ஷிப்களில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய நீர்ப்பந்து , குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட், உயிர்காப்பு, படகோட்டல் , சைக்கிள் ஓட்டுதல், கைப்பந்து, ஹாக்கி, கராத்தே, டேக்வாண்டோ, கேரம் மற்றும் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய விமானப்படையின் விளையாட்டு வீரவீராங்கனைகள்  கௌரவிக்கப்பட்டனர்.  மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு  விமானப்படை விளையாட்டு விளையாட்டு சம்மேளன  தலைவரால் அங்கீகரிக்கப்பட்டு வெகுமதிகளும்  வழங்கப்பட்டது.

மேலும், இதன்போது   விமானப்படைத் தளபதியினால்  சீனாவில் நடைபெற்ற 19வது உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற  கோப்ரல் நிமாலி  பதவிநிலை உயர்வும்  அளிக்கப்பட்டது  அவர் சார்ஜென்ட். நிலைக்கு பதவி  உயர்த்தப்பட்டார். அத்தோடு மேலும் பல வீரவீராங்கனைகள் மற்றும் பயிற்றுப்பாளர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில்  விமானப்படை பதவி நிலை பிரதானி மற்றும் பணிப்பாளர்கள் , பிரதிப் பண்ணிப்பாளர்கள் , விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும்  விளையாட்டு பிரிவின் தலைவர்கள், செயலாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் பலதரப்பட்ட  விளையாட்டுத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய  வீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை