இலங்கை விமானப்படை ஹிங்குராக்கொடையில் உள்ள 9வது தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவு 29வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இலங்கை விமானப்படை ஹிங்குராக்கொட நிலையத்தில் உள்ள 9வது தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவு அதன் 29வது ஆண்டு நிறைவை நவம்பர் 24, 2024 அன்று கொண்டாடியது. சடங்கு நினைவு நிகழ்வை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பி.எஸ். லியனாராச்சி தலைமை தாங்கினார். அன்றய தினம் காலை அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானது இதன்போது உரையாற்றிய கட்டளை அதிகாரி தேசத்திற்காக செய்த உயர்
ந்த தியாகங்களுக்காக, வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்கள், ஊனமுற்ற படை அதிகாரிகள், நடவடிக்கையில் காணாமல் போனவர்கள் (MIA) மற்றும் அவர்களின் அன்புக்குரிய குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த நிகழ்வை முன்னிட்டு பல சமூகசேவை திட்டம்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அதிகாரிகள் மற்றும் இதர நிலை அங்கத்தவர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பங்கேற்புடன் ஒரு விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வை முன்னிட்டு பல சமூகசேவை திட்டம்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அதிகாரிகள் மற்றும் இதர நிலை அங்கத்தவர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பங்கேற்புடன் ஒரு விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.