இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (CMETSL) அதன் 3வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) மற்றும் தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு (CPD) நிகழ்ச்சியை நடத்துகிறது.
இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (CMETSL) 3வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) 2025 ஏப்ரல் 09,  அன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் முப்படைகளைச் சேர்ந்த CMETSL உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

முப்படைகளைச் சேர்ந்த CMETSL உறுப்பினர்களின் தொழில்முறை வளர்ச்சியை வளர்ப்பதற்கும் திறன் அளவை மேம்படுத்துவதற்கும், இலங்கை கடற்படை அதிகாரிகளால் "தரவு மைய செயல்பாடுகள் மற்றும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்" குறித்த CPD நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (CMETSL) 3வது அமர்வுக்கான புதிய அதிகாரிகள் AGM இல் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, இலங்கை விமானப்படையின் விமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம்எயார்  வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரத்ன, CMETSL இன் தலைவராக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் உபுல் சமரவீர மற்றும் குரூப் கேப்டன் மனோரா வகிஸ்டா ஆகியோர் CMETSL இன் செயலாளராகவும் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை