விமானப்படை தீயணைப்பு பிரிவினரின் உயர்தர பயிற்சி மிக சிறப்பாக முடிவடைந்தது
விமானப்படையை சேர்ந்த 30படையினர்கள் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உயர்தரப்பயிற்சியை ஏகலை விமானப்படை பயிற்சி பாடசாலையில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் திகதியன்று முடித்து மிக சிறப்பாக வெளியேறினர்.

இந்த உயர்தரப்பயிற்சி மூலம் முறைப்பட்ட தீயணைப்பு பயிற்சி, தலைமைத்துவம், அறிவுத் சேகரித்தல், போன்ற பயிற்சிகளை படையினர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படை தீயணைப்பு பிரிவின் கட்டளை அதிகாரியான 'குரூப் கெப்டன்' PMCP டயஸ் அவர்கள் கலந்துக் கொண்டார். மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் பிரதம விருந்தினர் வழங்கி  கௌரவித்தார்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை