இலங்கை விமானப்படை மொரவெவ முகாமில் விமானப்படைத் தளபதியின் வருடாந்திர ஆய்வு.
விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களால் இலங்கை விமானப்படை மொரவெவ தளத்தின் வருடாந்திர ஆய்வு 2025  ஜூன் 28   நடைபெற்றது.

மொரவெவ விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பிரபாத் அலெக்சாண்டர் தலைமையிலான அணிவகுப்பை  விமானப்படைத் தளபதி  பார்வையிட்டார்.


மொரவெவ விமானப்படைத் தளத்திற்கும் ஒட்டுமொத்த இலங்கை விமானப்படைக்கும் விதிவிலக்கான மற்றும் பாராட்டத்தக்க பங்களிப்புகளைச் செய்த இரண்டு சேவையாளர்களுக்கு விமானப்படைத் தளபதி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

வாரண்ட் அதிகாரி சி திசாநாயக்க (ஆபரேஷன் டெக்னீசியன் ஸ்பெஷலிஸ்ட் I)

கோர்போரல் சானக ஜிஎல் (ஆபரேஷன் கிரவுண்ட் II)

விமானப்படைத் தளபதி தளத்தின் பல முக்கிய பகுதிகளை பார்வையிட்டார். இதில் முகாம் தலைமையகம், அதிகாரிகள் உணவகம், எண். 34 படைப்பிரிவு பிரிவு, படைப்பிரிவு சிறப்புப் படை பிரிவு, உற்பட அனைத்து பிரிவுகைளயும் ஆய்வுசெய்தார்.   விமானப்படை தளபதி விமானப்படை உணவகத்தில்  நடைபெற்ற அனைத்து அணிகளுக்கான மதிய உணவில் கலந்து கொண்டார். 

இந்த விஜயத்தின் போது, விமானப்படை தளபதி 4G CCTV அமைப்பு மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் புதிய அவசர அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் விரைவான மறுமொழி பொறிமுறையையும், படைப்பிரிவு சிறப்புப் படை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சியில் பயன்படுத்துவதற்காக ஒரு மொபைல் மருத்துவமனையாக புதுப்பிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தையும் ஆய்வு செய்தார்.

ஆய்வை முடித்து, விமானப்படைத் தளபதி அனைத்து ஊழியர்களையும் உரையாற்றினார், மேலும் தளத்தின் உயர் தரத்தை பராமரிப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை