பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி - விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் .
பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி (DSC&SC) இன் 51 பேர் கொண்ட குழு  2025  செப்டம்பர் 09,அன்று விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தந்தது. குரூப்  கேப்டன் சலாவுதீன் அகமது தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

குரூப்  கேப்டன் சலாவுதீன் அகமது தலைமையிலான குழு மற்றும் பல உறுப்பினர்கள், விமானப்படையின் துணைத் தலைமைத் தளபதி எயார்  வைஸ் மார்ஷல் டெமியன் வீரசிங்கவை சந்தித்தனர். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாராட்டுச் சின்னம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

விங் கமாண்டர் தரிந்து கொடித்துவக்கு இலங்கை விமானப்படையின் வரலாறு, மோதலுக்குப் பிந்தைய பங்கு மற்றும் சவால்கள் குறித்து விளக்கக்காட்சியை வழங்கினார். விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல்எயார்  வைஸ் மார்ஷல் தம்மிகா டயஸ், பயிற்சி இயக்குநர் ஜெனரல் எயார்  வைஸ் மார்ஷல் துஷார வீரரத்ன மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்த அமர்வில் பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை