.இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் பௌத்த மத வழிபாடுகள் தலதா மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பௌத்த மத வழிபாடுகள்  2025 அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கண்டி தலதா மாளிகையில் விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க  அவர்களின்  பங்கேற்புடன் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மாலை மல்வத்து மகாவிகாரைக்கு விஜயம் செய்த விமானப்படைத் தளபதி, மல்வத்து மகாவிஹாராதிபதி  மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய  திப்படுவாவே  ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான  தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.  பின்னர் அஸ்கிரி மகாவிகாரைக்கு விஜயம் செய்த அவர்,அங்கு  விகாராதிபதி  அதி வணக்கத்துக்குரிய வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதனபிதான  தேரரை சந்தித்து ஆசி பெற்றார். பின்பு    ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல நிலமேவை சந்தித்ததுடன், ஸ்ரீ தலதாவில் கிலான்பாச பூஜையையும் மேற்கொண்டார்.


23ம் திகதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட அவர்  அங்கு வழிபாடுகள்  மேற்கொண்டதுடன்  விமானப்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், அஸ்கிரியில் உள்ள மல்வத்த விஹாரஸ்தானங்களில்  வசிக்கும் துறவிகள் மற்றும் ஸ்ரீ தலதா மாளிகையின் அனைத்து ஊழியர்களுக்கும் விமானப்படை சுகாதார இயக்குநரால் மருத்துவ மற்றும் பல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.  

விமானப்படை  நலன்புரி பணிப்பகத்தினால்  மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வுகள் மூலம்  விமானப்படை அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள்  விமானப்படையில்  பணிபுரிந்து உயிர்நீத்த வீரர்கள் ஆகியோருக்கு  ஆசீர்வாதமும்  வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்க, விமானப்படை பணிப்பாக  குழுவின் அதிகாரிகள், மூத்த விமானப்படை அதிகாரிகள், படைவீரர்கள்  மற்றும் உயிர்நீத்த  விமானப்படை போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள்  ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.



First Day

Second Day
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை