17வது இலங்கை விமானப்படையின் திறந்த ஸ்குவாஷ் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை ஸ்குவாஷ் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த 17வது இலங்கை விமானப்படை  திறந்த ஸ்குவாஷ் போட்டிகள்   2025 அக்டோபர் 17 முதல் 24 வரை இலங்கை விமானப்படை ரத்மலானா விமானப்படை தள  ஸ்குவாஷ் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. போட்டியின் வெற்றியாளர்களுக்கான கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா விமானப்படையின் பிரதி தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் டாமியன் வீரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரவரிசை நிகழ்வான விமானப்படை திறந்த  ஸ்குவாஷ் போட்டிகளில் , உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஸ்குவாஷ் வீரர்கள்  அடங்கலாக  சுமார் 400 திறமையான வீரர்கள்  பங்குபற்றினர்.  இந்தப் போட்டி 9 வயதுக்குட்பட்டோர், 11 வயதுக்குட்பட்டோர், 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளிலும்,  ஆடவர்  மற்றும் மகளிர்  திறந்த  பிரிவு, ஆடவர்  மற்றும் மகளிர்  அமெச்சூர் பிரிவு,  35 வயதுக்குட்பட்டோர், 40 வயதுக்குட்பட்டோர், 45 வயதுக்குட்பட்டோர், 50 வயதுக்குட்பட்டோர், 55 வயதுக்குட்பட்டோர் மற்றும் 60 வயதுக்குட்பட்டோர் ஆகிய பல பிரிவுகளிலும் நடைபெற்றது.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திறந்த  ஸ்குவாஷ்  ஆடவர்  மற்றும் மகளிர்  இறுதிப் போட்டியில், இலங்கை வீரர்கள் ஷாமில் வக்கீல் மற்றும் ரவிந்து லக்சிரி ஆகியோர் ஆடவர்  பிரிவில்  இறுதிப்போட்டியில் போட்டியிட்டனர்,  ரவிந்து லக்சிரி  3க்கு 1 என்ற சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று எயார்  சீஃப் மார்ஷல் பி.எச். மெண்டிஸ் நினைவுக் கோப்பையை வென்றனர்,  அதே நேரத்தில் மகளிர் பிரிவின்  இறுதிப் போட்டியில்  இலங்கை வீராங்கனைகள் சனித்மா சினேலி மற்றும் ரன்லியா வுட்  ஆகியோர் இடையே நடைபெற்றது,  இதில்  சனித்மா சினேலி 3க்கு 0 என்ற சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று ஏர் சீஃப் மார்ஷல் ஹாரி குணதிலக நினைவுக் கோப்பையை வென்றார்.

இந்த நிகழ்வில் விமானப்படை  பணிப்பக குழுவின் அதிகாரிகள், இலங்கை ஸ்குவாஷ் சங்கத்தின் தலைவர் குரூப் கேப்டன் எரண்டா கீகனகே, மற்றும்  இதர அதிகாரிகள்படைவீரர்கள்  மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை