முப்படைவீரர்களுக்கு அலரிமாளிகையில் விருது
முப்படைகளையும் சேர்ந்த 231 வீரர்களுக்கு சாதனை விருதுகள் கடந்த திங்களன்று (15.07.2013) மாலை அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டன. இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இவ்விருதுகளை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் முப்படைகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ' வீர விக்ரம விபூஷன 'விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப் பட்டதுடன் யுத்தத்தின் போது உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினரிடம் அவர்களுக்குரிய சாதனை பதக்கங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




































































