
வருடாந்த முகாம் பரிசோதனை ஏகல மற்றும் மீறிகம
இலங்கை விமானப்படை ஏகல முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 02-08- 2013 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படைத்தளபதி தலைமையில் இடம்பெற்றது.மேலும் இங்கு விமானப்படைத்தளபதியினை ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டன்" ரணசிங்க அவர்கள் வரவேற்றதுடன் இதற்கான அணிவகுப்பு மரியாதையினை "பிளையின் ஒபிஸர்" திலகரத்ன அவர்கள் மேற்கொண்டார்.அத்தோடு இங்கு விமானப்படைத்தளபதியின் மூலம் முகாமின் அனைத்து பகுதிகளையும் பரிசோதித்த அதேநேரம் கடந்த காலங்களில் சிறப்பான முறையில் சேவையாற்றிய முகாமின் உறுப்பினர்களுக்கு விமானப்படை தளபதியின் மூலம் சன்மானங்களும் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விமானப்படைத்தளபதி மீறிகம் விமானப்படை முகாமிற்கு சென்று அங்கும் தனது பரிசோதனையினை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதனைத்தொடர்ந்து விமானப்படைத்தளபதி மீறிகம் விமானப்படை முகாமிற்கு சென்று அங்கும் தனது பரிசோதனையினை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.





























































































