அநுராதபுர புனித நகரில் இருந்து 4 கி.மி. தூரத்தில் இது அமைந்துள்ளதுடன் கடந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் பங்களிப்பாற்றிய முகாம்களுல் ஒன்றாகவும் இது விளங்குகின்றது.
மேலும் இங்கு முன்னர் இல.01 விமானி பயிற்ச்சிப்பிரிவு காணப்பட்டதுடன் பின்னர் இது சீனக்குடா முகாமிற்க்கு மாற்றப்பட்டது,அத்தோடு இங்கு எம்.ஐ. 17 கெலிகொப்டர்களை உள்ளடக்கிய இல.06 கெலிகொப்டர் பிரிவும் அமைந்துள்ள அதேநேரம் இதன் கட்டளை அதிகாரியாக "குறூப் கெப்டன்" தூயகொந்த அவர்கள் செயற்ப்பட்டுக்கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.