இலங்கை விமானப்படை சின்னங்கள்

Pilot Badgeவிமானிகளுக்கான சின்னம்


இச்சினத்தினை இலங்கை விமானப்படையில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இராணுவம் ஒன்றில் ஆரம்ப மற்றும் உயர் பயிற்ச்சிகளை முடித்தவர்களுக்கு அணியமுடியும். மேலும் இச்சின்னமானது கருப்பு நிற வர்ணப்பின்னனியில் வடிவமைக்கப்பட்டுள்ள அதேநேரம் வெள்ளை நிற இறக்கைகளுடன் ,அரச இலட்ச்சினை மற்றும் அதன் மத்தியில் சிங்கள மொழியில் இலங்கை என்று பொறிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு இச்சின்னமானது  சீருடையின் இடது பக்கத்தில் அணியப்படல் வேண்டும்.


Flight Engineer Badge

 விமான வழிகாட்டல் சின்னம்


இச்சின்னமானது விமான வழிகாட்டல் தொடர்பான பயிற்ச்சியினை முடித்தவர்களுக்கு வழங்கப்படும் அதேநேரம் இதன் மத்தியில் என் எனும் ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய விடயங்கள் முன்னைய சின்னத்தை போன்றதாகும்.

Flight Engineer Badge

விமான பொறியியல் சின்னம்


இச்சினத்தினை ஆரம்ப பொறியியற் பாடநெறி மற்றும் கூடுதலாக விமான சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.இதன் மத்தியில் இ எனும் ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய விடயங்கள் முன்னைய சின்னத்தை போன்றதாகும். Air Gunner Badgeவிமான துப்பாக்கிப்பிரயோக வீரர்களின் சின்னம்

விமானத்துப்பாக்கிப்பிரயோக பயிற்ச்சியின் பின் இச்சின்னத்தினை அணிய முடியும் என்பதுட் இதன் மத்தியில் எ.ஜி. எனும் ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.ஏனைய அம்சங்கள் மற்றைய சின்னங்களை ஒத்தவையாகும்
.

Para Instructor Badgeபரிசூட் ஆலோசகருக்கான சின்னம்

இச்சின்னத்தினை இலங்கை விமானப்படை மற்றும் தரைப்படை மற்றும் அங்கீகரிகக்கப்பட்ட வெளிநாட்டு இராணுவமொன்ரினால் பரிசூட் ஆலோசகர்  தொடர்பான பயிற்ச்சியினை பெற்றுக்கொண்டபின் அணிய முடியும்.அத்தோடு இதன் மத்தியில் பரிசூட்டின் படம் பொறிக்கப்பட்டுள்ளதோடு இதன் மற்றைய பன்புகள் முன் குறிப்பிட்ட சின்னங்களை ஒத்தவையாகும்.
Air Surveillance Badge

விமான கண்கானிப்பாளர்களுக்கான சின்னம்

இச்சின்னமும் விமான கண்கானிப்பாளர்களுக்கான பயிற்ச்சியினை முடித்தவுடன் அணியப்படுவதுடன் இதன் மத்தியில் எ.எஸ். என்று ஆங்கிலத்தால் பொறிக்கப்பட்டுள்ளது.

Para Trooper Badgeபரிசூட் குதிப்பாளர்களுக்கான சின்னம்

பரிசூட் குதிப்பு தொடர்பான பயிற்ச்சியனை நிறைவுசெய்தவுடன் இச்சின்னத்தினை அணிய முடியும் .

Para Trooper Badgeபரிசூட் ஒழுங்கமைப்பாளர்களுக்கான சின்னம்
Sky Diver Badgeஇராணுவ சுதந்திர குதிப்பாளர்களுக்கான சின்னம்Sky Diver Badgeஇராணுவ சுதந்திர குதிப்பு மற்றும் 


ஒழுங்குபடுத்துதலுக்கான சின்னம்
Commando Badgeவிமானப்படை விஷேடப்படைப்பிரிவு

Explosive Ordinance Disposal Badge
குண்டு வெடிப்பை செயழிலக்க செய்யும் வீரர்களுக்கான சின்னம்Flight Controller Badge

சண்டைக்கட்டுப்பாட்டாளர்களுக்கான சின்னம்Flight Medical Officer's Badgeவிமான மருத்துவ அதிகாரிகளுக்கான சின்னம்

இச்சின்னத்தினை விமான மருத்துவ பாடநெறியை முடுத்தவுடன் அணிய முடியும் .
Aviation Physician Badgeவிமான சேவைகள் மருத்துவச்சின்னம்

அமெரிக்கா இங்கிலாந்து விமானப்படைகளில் தனது 05 வருட சேவைக்காலத்தின் பின் விமானசேவைகள் தொடர்பான பாடநெறியை முடித்தவுடன் இதனை அணிய முடியும் என்பதுடன் இச்சின்னத்தில் இரு பக்கங்களிலும் இறக்கைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Cheif Aviation Physician Badgeவிமான சேவைகளுக்கான பிரதான மருத்துவ அதிகாரிக்கான சின்னம்

இச்சின்னமானது இலங்கை விமானப்படையின் சுகாதார இயக்குனர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிக்கு வழங்கப்படுவதுடன் ,இச்சின்னமும் சாதாரண மருத்துவ அதிகாரிகளின் சின்னம் போன்று அமைந்தாலும் இதில் ஓர் நட்சத்திரம் காணப்படுவது விஷேட அம்சமாகும்.UAV Pilot Badgeஆளில்லா விமான ஓட்டுனர் விமானிகளுக்கான சின்னம்

இதனை வெளிவாரிதுறையில் குறைந்தது15 மணித்தியாளங்கலும் ,உள்வாரித்துறையில் குறைந்தது 50 மணித்தியாளங்கலும் ஆளில்லா விமான சேவையில் ஈடுபட்டு இருந்தால் அணியமுடியும்.
Land Based Air Defenceதரை மார்க்க விமான பாதுகாப்பாளர்களுக்கான சின்னம்

Land Based Air Defence

தகமைப்படைத்த பல்வைத்திய தொழிநுட்பவியளாலருக்கான சின்னம்

இதனை பேராதனை பல்கலைகழகத்தில் பல்வைத்தியம் தொடர்பான கற்கைநெறியை முடித்தவுடன் அணியமுடியும்.

Land Based Air Defence

தகமைப்படைத்த தாதியார்களுக்கான சின்னம்

இச்சின்னத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தில் தாதியார்களுக்கான கற்கைநெறியினை பூர்த்திசெய்தவுடன் அணியமுடியும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

திரும்ப


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை