இம்முகாமானது விமானப்படை தலைமையகத்துக்கு தேவையான நிர்வாக மற்றும் ஒழுங்கமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் அதேநேரம் இது மத்திய கொழும்பில் அமைந்திருப்பதால் அங்கு காணப்படும் அரசாங்க நிருவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏனைய படையினருடன் இணைந்து வழங்குகின்றது.
அத்தோடு இங்கு பிரதான பல் மருத்துவ நிலையம் மற்றும் போக்குவருத்து பிரிவு உட்பட விமானப்படை அங்கத்தவர்களுக்கான விவாக விடுதியும் அமைந்துள்ள அதேநேரம் இலங்கை விமானப்படை முகாம்களிலே முகாமுக்கு வெளியே அமையப்பெற்றுள்ள அதிகாரிகளுக்கான விவாக விடுதியும் அமைந்துள்ளது.
விஷேடமாக இங்கு விமானப்படையின் அனைத்துவிதமான விளையாட்டுக்கழகங்களும் காணப்படுவதோடு மைதானங்களும் அமையப்பெற்ரிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும்இதன் கட்டளை அதிகாரியாக "குறூப் கெப்டன்" வீரகோன் அவர்கள் கடமையாற்றுகின்றார்.