இவ்விமானப்படையானது காலி நகரில் இருந்து 14 கி.மி. தொலைவில் அமைந்துள்ளதுடன் இது கடலோரமாக அமைந்துள்ள விமான ஓடுபாதையினையும் கொண்டுள்ளது. மேலும் இது இரண்டாம் உலகப்போரின் போது றோயல் சிலோன் விமானப்படையின் மூலம் இஸ்தாபிக்கப்பட்டதுடன் தற்போது இது இலங்கை விமானப்படையாக மாற்றம் பெற்று இங்கு வர்த்தக மற்றும் இராணுவ விமானங்களின் தொழிற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன். அத்தோடு இங்கு ஆம் ஆண்டு ஜப்பானிய குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த றோயல் கனேடிய விமானப்படை வீரர்களை நினைவூட்டுமுகமாக ஓர் ஞாபகர்த்த நினைவுத்தூபியொன்று கடந்த 1995- 04 - 05 ஆம் திகதியன்று அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் விஷேடமாக இரண்டாம் உலகப்போரின் போது சேர் வின்சன்ட் சேச்சின் மூலம் இலங்கையில் இருந்து விமான தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட "எயோர் கொமடோர்" பிரிகோல் அவர்கள் தனது கட்மைகளை நிறைவேற்றியமையும் இங்கு என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்போது இதன் கட்டளை அதிகாரியாக "விங்கமான்டர்" விஜேநாயக்க அவர்கள் கடமைபுறிகின்ரார்.