இலங்கை விமானப்படை இரத்மலானை முகாமானது கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு நகரில் இருந்து 10 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளதுடன் இங்கு விமானநிலைய மற்றும் விமானசேவைகள் அதிகாரசபையின் மூலம் நிர்வகிக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகளை வழங்கும் விமானநிலையமும் அமைந்துள்ளது. மேலும் இங்கு இல.04 விமானப்பிரிவு ,இல.08 விமானப்பிரிவு உட்பட தொடர்பாடல் இலத்திரனியல் பிரிவுகளையும் கொண்டுள்ளது.இதன் கட்டளை அதிகாரியாக "எயார் கொமடோர் " கொடகதெனிய அவர்கள் கடமை புரிகின்றார்.