இலங்கை விமானப்படை சீகிரிய முகாமானது 1949ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது விமான ஓடுபாதையுடன் கூடிய ஓர் சிறிய முகாமாக ஆரம்பிக்கப்பட்டதோடு பின்னர் 1946களில் இது றோயல் சிலோன் விமானப்படையினரால் கைவிடப்பட்டது . என்றாலும் 1985- 04- 19 ஆம் ஆண்டு அப்போதைய விமானப்படைத்தளபதியாக இருந்த "எயார் மார்ஷல்" டி.சி. பெரேரா அவர்களின் அழைப்பின் பேரில் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருந்த கொளரவ லலித் அதுலத்முதலி அவர்கள் மூலம் மீண்டும் இது திறந்துவைக்கப்பட்டது. மேலும் இங்கு உலோகப் பொருட்கள், சீமெந்துக்கல் தயாரிக்கப்படும் அதேநேரம் மரக்கறிவகைகள் என்பனவும் பயிறிடப்படுகின்றன , அத்தோடு இதன் கட்டளை அதிகாரியாக விங்கமான்டர் சி.பி. குணதிலக அவர்கள் செயற்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.