இந்திய விமானப்படை தளபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

இந்திய விமானப்படை தளபதி 'எயார் சீப் மார்ஷல்' பிரதீப் வாசண்ட் நாயிக் இன்று (2011.01.16) ஞாயிற்றுக்கிழமை நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.

இவரை பன்டாரனாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை கூட்டுப்படைகளின் பிரதானியும், விமானப்படை தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலக வரவேற்றார்.

மேலும் விமானப்படை இணைப்பாளர் 'எயார் கொமதோர்' விவேக் ராம் சன்தாரி, 'ஸ்கொட்ரன் லீடர்' சங்கீத் கதைக் (எ.டி.சி) மற்றும் இந்திய விமானப்படை தளபதியின் பாரியார் திருமதி மதுபாலா நாயிக் அவர்களும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்திய விமானப்படை தளபதி 'எயார் சீப் மார்ஷல்' பிரதீப் வாசண்ட் நாயிக் இலங்கை முப்படைத்தளபதிகளின் பிரதானி அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்க உள்ளார். மேலும் இவர் பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்‌ஷ, வெளிவிவகாரச் செயலாளர் மற்றும் முப்படைத்தளைபதிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளார். அத்துடன் இலங்கை விமானப்படையின் 'பிளைன்' பிரிவுகளையும் பார்வையிடவுள்ளார்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.