இல.03 ரேடார் பிரிவின் 04 வது நிறைவாண்டு விழா.

இலங்கை விமானப்படையின் இல.03 ரேடார் பிரிவின் 04 வது நிறைவான்டு விழா 01.02.2011ம் திகதியன்று சீனக்குடா ,இலங்கை விமானப்படை கலைப்பீடத்தில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

எனவே இத்தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன்,குறிப்பாக சீனக்குடா வெள்ளமணல் பிரதேச மக்களுக்கு பற்சிகிச்சை உட்பட மருத்துவ முகாமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இந்திரா M.K.2 எனும் இந்த ரேடார் ஆனது 2007ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதன் தொடக்கம் இன்று வரை பல்வேறுபட்ட சேவைகளை குறிப்பாக முன்எச்சரிக்கை மற்றும் விமான தொடர்புகள் போன்ற பல்வேறு சேவைகளை ஆற்றிவருகின்றமை விஷேட அம்சமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.