சேவா வனிதா பிரிவு தனது 17வது வீட்டினை அன்பளிப்பு செய்தது.

இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவானது ,தனது 17வது வீட்டினை 18.02.2011 ம் திகதியன்று கண்டி ,மெனிக்ஹின்னவில் வைத்து அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி.நெலுன் குணதிலக அவர்கள் திறந்துவைத்தார்.

மேலும் இவ்வீடானது கடந்த 22.02.2011 ம் திகதியன்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த "பிலைட் சாஜன்ட்' அஸ்வதும்மவின் மனைவி மற்றும் அவரின் இரு குழந்தைகளுக்கும் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேநேரம் இவ்வீடானது இலங்கை விமானப்படையின் சீகிரிய முகாமின் கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்' சமிந்த டி சில்வா தலைமையில் மேற்பார்வை செய்யப்பட்டதுடன் ,இவ்விழாவுக்காக சேவா வனிதா பிரிவின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துசிறப்பித்தனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.