இலங்கை விமானப்படை 'மாபல் பீச் விடுமுரை விடுதி' ஜனாதிபதியால் திறந்து வைப்பு

திருகோனமலை, மாபல் பீச் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'விமானப்படை மாபல் பீச் விடுமுரை விடுதி' நேற்று (மார்ச் 13) திகதி அதிமேதக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரமவின் ஆலோசனைக்கு ஏற்ப சீன குடா கல்லூரியின் கட்டளை அதிகாரி 'எயார் வைஸ் மார்ஷல்' கெ.வி.பி. ஜயம்பதி அவர்களின் வழிகாட்டுதல் மூலம் இந்த 'விமானப்படை மாபல் பீச் விடுமுரை விடுதி 'நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கௌரவ கோடாபய ராஜபக்ஷ் மற்றும்  கூட்டுப்படைகளின் பிரதானி 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலக, விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம, கடற்படைத்தளபதி, பொலிஸ் மா அதிபர்  உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

விமானப்படை மாபல் பீச் விடுமுரை விடுதி



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.